ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா தெரிவு

 

ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா தெரிவு!

ஜப்பானின் புதிய பிரமராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஷிகெரு இஷிபா அந்நாட்டு பாராளுமன்றத்தினால் முறைப்படி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை பிரதமராக இருந்துவந்த ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுத்தது. இதையடுத்து, அவா் நாட்டின் அடுத்த பிரதமராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று (01) அந்நாட்டு பாராளுமன்றினால் அவர் முறைப்படி பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

Post a Comment

Previous Post Next Post