ஆண்களே அவதானம்! கொழும்பில் சிக்கிய 20 வயது இளைஞன்

 கொழும்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு கொண்டு தகாத புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி பணம் பெற்ற இளைஞன் ஒருவரை கணினி குற்ற புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஆண்களுடன் சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பு ஏற்படுத்தி தகாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்ட இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய, ஆண் ஒருவரை அச்சுறுத்தி 07 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டதாக குறித்த இளைஞன் மீது கணினி குற்ற புலனாய்வு பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள், சந்தேக நபரை தெஹிவளை கவுன்சில் அவென்யூ பகுதியில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துல்ஹிரிய பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

Previous Post Next Post