பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் அதிரடியாக கைது

  புத்தளம்-கற்பிட்டியில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்த போது பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு அருகில் வைத்து அவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட வேட்பாளரிடமிருந்து  97,200 ரூபா பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் அதிரடியாக கைது | Candidate Arrested For Giving Money To Voters

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பொதுத் தேர்தலில் போட்டியிடும் யாழ். வேட்பாளர் ஒருவர்  நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post