நபரொருவர் அடித்துக் கொலை. நடந்தது என்ன குற்றம்?


நபரொருவர் அடித்துக் கொலை

அத்துமீறி வீட்டினுள் நுழைந்து அறையின் கதவை உடைத்து அங்கிருந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சாலியவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை (15) சாலியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாய 07 பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டினுள் நுழைந்த சந்தேகநபர்கள் பொல்லினால் தாக்கி குறித்த நபரை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

35 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

நேற்றிரவு முன்தினம் இரவு (14) மதுபான விருந்து ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அதில் பங்கேற்றிருந்த இருவர் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாலியவெவ பிரதேசத்தில் வசிக்கும் 23 மற்றும் 24 வயதுடைய இரு சந்தேகநபர்களே இந்த குற்றச் செயல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாலியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

Previous Post Next Post