பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

 கட்டுநாயக்க நோக்கி பயணத்துக் கொண்டிருந்த நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொடை இடமாறலில் பல வாகனங்கள்  நேற்று(22.01.2024) பணம் செலுத்தும் கருமபீடத்திற்கு அருகில் வரிசையில் நின்றுள்ளன.

இதன்போது பின்னால் வந்த கெப் ரக வண்டியொன்று அந்த கார்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து | Multiple Vehicle Collision In Kattunayakka Road

இந்த விபத்தின் போது கார்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன்,யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Post a Comment

Previous Post Next Post