மனைவியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத கணவன்! உயிருக்கு போராடும் கணவன்.

 ஹொரணை பிரதேசத்தில் வாகன விபத்தில் மனைவி உயிரிழந்ததையடுத்து, துக்கத்தைத் தாங்க முடியாமல் கணவர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சிதுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி, இங்கிரிய எலபட வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த 20 வயதுடைய யுவதி படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

விபத்தில் அவரது கணவர் லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மனைவியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் எடுத்த விபரீத முடிவு | Wife Died Husband Wrong Decision In Horana

வீடு திரும்பிய கணவனுக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு கிடைத்து சென்ற போது மனைவி உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது. 

மனைவியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் வீட்டிற்கு வந்தவுடன் விஷம் குடித்துள்ளார்.

குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனைவியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் எடுத்த விபரீத முடிவு | Wife Died Husband Wrong Decision In Horana

இங்கிரிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post