கொழும்பில் மூடப்படும் பிரதான வீதிகள்

 காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரை மற்றும் செராமிக் சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரையான வீதிகள் போக்குவரத்துக்காக மூடப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர். 

சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளதால், அதற்கான விசேட போக்குவரத்து திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பெப்ரவரி 02ஆம் திகதி வரை காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையிலும், முற்பகல் 11.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும் குறித்த வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் மூடப்படும் பிரதான வீதிகள் | Roads To Be Closed In Colombo

பெப்ரவரி 03ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தின நிகழ்வு நிறைவடையும் வரை காலி வீதி கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரை மற்றும் செராமிக் சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரையான வீதிகள் மீண்டும் மூடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post