கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி எடுத்துச் செல்லப்படும் பாடகி பவதாரணியின் உடல்

 கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்த பாடகி பவதாரணியின் உடல் தற்போது(26.01.202) கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றது. 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம்(25) மாலை திடீரென உயிரிழந்தார். 

இதேவேளை, இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு விரைந்ததுடன், அதன் பின்னர் பவதாரணியின் உடல் கொழும்பில் உள்ள மலர் சாலையில் வைக்கப்பட்டிருந்தது. 

மேலும், இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் இன்று காலை கொழும்பு நோக்கி வருகைத் தந்திருந்தனர்.

 இந்தநிலையில், பாடகி பவதாரணியின் உடல் இன்று சென்னைக்கு கொண்டு செல்லப்படவுள்ள நிலையில் தற்போது அவரது சடலம் கட்டுநாயக்க விமான  நிலையத்தை நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றது.  




Post a Comment

Previous Post Next Post