கோர விபத்தில் சிக்கிய குடும்பம்: தாய் பலி, ஆபத்தான நிலையில் மகள்


 ஹொரணை - பாணந்துறை வீதியின் குல்பான பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் ஆகியோர் பயணித்த முச்சக்கர வண்டி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம, ரைகம கொஸ்வத்தபர பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஆர்.ஏ.தனுஜா பிரியதர்ஷனி என்ற 40 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பெற்றோர்கள் இருவரும் தமது மகளின் தேவைக்காக ஹொரண நகருக்கு வந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கோர விபத்தில் சிக்கிய குடும்பம்: தாய் பலி, ஆபத்தான நிலையில் மகள் | Mother Dies In A Accident Daughter Injured

பிரதேசவாசிகளால் தாய் மற்றும் தந்தை மற்றும் சிறுமியை ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது தாய் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டு, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்தார்.

கோர விபத்தில் சிக்கிய குடும்பம்: தாய் பலி, ஆபத்தான நிலையில் மகள் | Mother Dies In A Accident Daughter Injured

தந்தையின் வலது கை, கழுத்து மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post