நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட பல அரசியல் பிரமுகர்கள் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டனர்-

 நாட்டில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதற்கமைய சில அரசியல்வாதிகள் விமான நிலையம் சென்ற போதும், அவர்கள் குடிவரவு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய சுமார் 30 பேர் விபரங்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஏற்கனவே கடந்த ஆட்சியின் போது முக்கிய அமைச்சு பதவிகளை வகித்தவர்களின் மனைவிகள், பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அநுர பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு - விமான நிலையத்தில் சிக்கப் போகும் பெரும் புள்ளிகள் | More Than 20 People To Leave From Sri Lanka

இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றம் ஊடாக இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post