அனுரகுமாரவே இலங்கையின் கடைசி ஜனாதிபதி; சுனில் ஹந்துன்நெத்தி!..
kalmunaiSeptember 24, 2024
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் முன்னுரிமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதே என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுனில் ஹந்துன்நெத்தி இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம்
இலங்கை மக்கள் இன்று இந்த நாட்டின் கடைசி நிறைவேற்று ஜனாதிபதியை நியமித்துள்ளீர்கள். இனி நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் இருக்க மாட்டார்கள். அதற்கு பொதுமக்களின் ஆதரவு தேவை என்றார்.
அதோடு அனுரவின் ஆட்சியில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் வெகுவாகக் குறைக்கப்படும் எனத் தெரிவித்த அவர், ‘மக்களுக்குத் தேவையில்லாதவை அரசியல்வாதிகளுக்குத் தேவைப்படாது என மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம்.