தனியார் பேருந்து நடத்துனரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய உரிமையாளர்

 தனியர் பேருந்து ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதாக கூறி உரிமையாளரால் தாக்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் குறித்த சம்பவம் நேற்று(07.10.2024) இடம்பெற்றுள்ளது

இது தொடர்பில், தெரியவருவதாவது களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையானரின் பேருந்தானது கல்முனை - மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவருகிறது.

குறித்த பேருந்தின் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக கூறி நடத்துனர் மீது அதன் உரிமையாளர் குற்றச்சாட்டு தெரிவித்து கடமையில் இருந்த அவரை சம்பவதினமான நேற்று பகல் ஒந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணி ஒன்றிற்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கியுள்ளார்.

தனியார் பேருந்து நடத்துனரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய உரிமையாளர் | The Owner Tied The Bus Driver A Tree And Beat Him

இதனை கண்ட பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

(நன்றி தமிழ் வின் )

Post a Comment

Previous Post Next Post