இனி சர்வதேச பாடசாலைகளை கவனிக்க கல்வி அமைச்சில் தனி பிரிவு - பாடசாலைக் கட்டணங்களையும் அளவுக்கு அதிகமாக அதிகாரிதால் உடனடி சட்ட நடவடிக்கை!

 

தாமரை கோபுர சம்பவம்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல் | Important Notices To Parents 

சர்வதேச பாடசாலைகளை (International School) ஒழுங்குபடுத்துவதற்கான தனிப் பிரிவை உடனடியாக நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் அண்மைக்காலமாக சில சர்வதேச பாடசாலைகள் தாங்கள் விரும்பிய அதிக கட்டணங்களை பெற்றோர்களிடம் முற்கூட்டி அறிவிக்காத நிலையில் கட்டண அதிகரிப்பை செய்வாதால் பல பெற்றோர்கள் மனோ ரீதியாகவும் பாதிகாப்படுவதாகவும்  இதானல் பல மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நிறுவனம் இல்லாத காரணத்தினால் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர்களின் கல்வித் தகுதி, கற்பித்தல் முறை, குழந்தைகளின் ஒழுக்கம், கட்டணம் வசூலிப்பதில் உள்ள முரண்பாடுகள், பாடத்திட்டம் உள்ளடக்காதது போன்ற பல பிரச்சினைகளை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பிரச்சினைகள் குறித்து அமைச்சுக்கு அவ்வப்போது முறைப்பாடுகள் கிடைத்து வந்தன. ஆனால் இந்த விவகாரத்தை விசாரிக்க சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாததால், சம்பந்தப்பட்ட பாடசாலையில் மட்டுமே அமைச்சகம் விசாரணை செய்ய முடியும். அந்த பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கு தனியான பிரிவு நிறுவப்பட்டதன் பின்னர் நிலைமை மாறும் என அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கம்பனிச் சட்டத்தின் கீழ் முந்நூற்று தொண்ணூற்று ஐந்து சர்வதேச பாடசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் நூற்று தொண்ணூற்று ஐந்து மேல் மாகாணத்தில் உள்ளன. வட மத்திய மாகாணத்தில் நான்கு பாடாசாலைகளும் வடமேல் மாகாணத்தில் 12 பாடசாலகளும் உள்ளன. 

நேற்று முன்தினம் தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி உயிரிளந்த  சம்பவம் தொடர்பில் இன்று (10ம் திகதி) அறிக்கை சமர்ப்பிக்குமாறு சர்வதேச பாடசாலைக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அறிக்கையை பெற்றுக்கொண்ட நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் நியமிக்கப்பட்ட குழு உள்ளிட்ட அதிகாரிகள் குழு இன்று பாடசாலைக்கு செல்லவுள்ளது. மூன்று மேலதிக செயலாளர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள். இக்குழுவினர் பாடசாலையில் தற்போதுள்ள மாணவர்களுக்காக ஆலோசனை சேவைகள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்களா, குழந்தைகளின் சாராத செயல்பாடுகள் ஆகியவற்றை முழுமையாக கண்காணிக்கும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.மேலும் சர்வதேச பாடசாலைகளில் மாணவர்களுக்கு ஏற்படும் பழிவாங்கல்கள் கட்டண தொடர் அதிகரிப்புக்கள் தகுதி நிலை குறைந்த ஆசிரியர்கள் தொடர்பாகவும் பின் வரும் கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முறைப்பாடுகளையும் பெற்றோர்கள் வழங்க முடியும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.                                                              Director of Education - 0112785821                          Additional Secretary Administrative -  0112 784 814




    

              


Post a Comment

Previous Post Next Post