கணவன் மனைவி இருவரும் வெட்டிக் கொலை!



வீடொன்றில் இருந்த தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர். அஹங்கம, வல்ஹெங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்தே இவ்விருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

அல்கேவத்தையைச் சேர்ந்த கமனி வீரதுங்க (63), பி.ஜயசிங்க (67) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தம்பதியின் மகள் கர்ப்பிணியாவார். அவர், சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை (04) காலை வீட்டில் இருந்து கொழும்பு சென்றுள்ளார். தந்தைக்கு மகள் தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளார். எவ்விதமான பதிலும் இல்லை. அதனையடுத்தே பக்கத்து வீட்டாருக்கு அழைப்பு எடுத்துள்ளார்.

அவர்கள், இந்த தம்பதியின் வீட்டுக்குச் சென்று பார்த்த போது, ​​வீட்டுக்குள் தம்பதியர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது ​தெரியவந்தது

Post a Comment

Previous Post Next Post