விருப்பு தெரிவு போட்டியை தவிர்க்கும் பொறிமுறையை தயாரிக்கும் தேசிய மக்கள் சக்தி.

 எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தனது வேட்பு மனுப் பட்டியலை மாவட்ட மட்டத்தில் இறுதி செய்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளுக்கான போட்டியைத் தவிர்ப்பதற்கான பொறிமுறையை தேசிய மக்கள் சக்தி தயாரித்து வருவதாகவும் அவர் ஊடகங்களிடம்  குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எந்த வகையிலும் தலையிடாது எனவும், விருப்பு வாக்குகள் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை, தமது கட்சி உறுதி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய கட்சிகளைப் போல் அல்லாமல், தேசிய மக்கள் சக்தியின் நியமனப் பட்டியல்கள் மாவட்ட மட்டத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அபேசிங்க, இறுதி செய்யப்பட்ட பட்டியல்கள் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

விருப்பு தெரிவு போட்டியை தவிர்க்கும் பொறிமுறையை தயாரிக்கும் தேசிய மக்கள் சக்தி | Npp To Avoid Elective Competition

தேசிய மக்கள் சக்தி, தனது நியமனப் பட்டியல்களிலும் தேசியப் பட்டியலிலும் அதிகமான பெண் வேட்பாளர்களை உள்ளடக்கும், அதேவேளை இரண்டு பட்டியல்களிலும் அதிக தொழில் வல்லுனர்களும் அடங்குவர்.

விருப்பு தெரிவு போட்டியை தவிர்க்கும் பொறிமுறையை தயாரிக்கும் தேசிய மக்கள் சக்தி | Npp To Avoid Elective Competition

மேலும், கட்சிக்குள் அரசியல் கட்சிகள் அல்லது குழுக்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post