புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹமா எலிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹமா எலிய பதுலுஓய பிரதேசத்தைச் சேர்ந்த 27 பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்த நிலையில், கணவன் தலை மறைவாகிஉள்ளார்.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்