அக்குரனை பிரதேசத்தில் மழை காலம் வெள்ளம் வரும் போது மட்டும் தேசியம், அபிவிருத்தி என பேசுபவர்கள் அதனை முன்கொண்டு செல்வதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை என கண்டி மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் இளம் அரசியல் செயட்பாட்டாளர் ரஸ்லின் பரீட் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற பாரிய மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட போதே அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். இன் நிகழ்வில் குறித்து குழுவில் இம்முறை போட்டியிடும் முக்கிய அரசியல் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். தாங்களின் எதிர் கால வேலைத் திட்டங்கள் தொடர்பில் இச் சந்திப்பில் கருத்துரைகளும் இதன் போது முன் வைக்கப்பட்டன.
