Trending

தம்புள்ளை பிரதான வீதியில் 3வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

  


கலேவெல- தம்புள்ளை பிரதான வீதியில், இப்பன்கட்டுவ எனுமிடத்தில் மீன் லொறி, மூன்று வாகனங்களுடன்  மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த பாரிய விபத்தில் டிப்பர் வாகனத்தில் பின்புற சில்லுகள் நான்கும் கழன்று ஓடிவிட்டன.
இவ்வாறு நான்கு சில்லுகளும் கழன்று ஓடிவிட்டமையால், அந்த டிப்பர் வீதியை விட்டு விலகி நின்று உள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மீன் லொறியின் சாரதி காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கலேவெல பகுதியில் இருந்து தம்புள்ளை பகுதியை நோக்கி மீன்களை ஏற்றிக்கொண்டு சிறிய ரக லொறி பயணித்துக் கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில், தம்புள்ளை பக்கத்தில் இருந்து கலேவெல பகுதியை நோக்கி மணல் ஏற்றிக்கொண்டு டிப்பர் வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது.

அந்த டிப்பர் வாகனத்தின் பின்புற சில்லுகள் நான்கும் கழன்று உருண்டோடியமையால், அந்த டிப்பர், வான் மற்றும் மற்றொரு லொறியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.  

விபத்தில் படுகாயமடைந்த மீன் லொறியின் ஓட்டுநர், உள்ளூர்வாசிகள் உதவியுடன் மீட்கப்பட்டு தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளையில் இருந்து கலேவெல நோக்கி ஓட்டிச் சென்ற போது, எதிர் திசையில் இருந்து வந்த லொறி திடீரென வீதியின் நடுவில் வந்து மோதியதாக டிப்பர் லொறியின் ஓட்டுநர்  கூறினார்

Post a Comment