புதிய கைத்தொலைபேசி வாங்க முயற்சிப்போருக்கான விசேட அறிவுறுத்தல்!

புதிதாக கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்யும் போது, குறித்த கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல்  ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அந்த ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, IMEI என டைப் செய்து இடைவெளி விட்டு, 15 இலக்க IMEI எண்ணை டைப் செய்து அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறும் அவர் கோரியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post