இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் சற்றுமுன் ஆரம்பமாகி நடைபெற்றுகொண்டிருக்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று நிகழ்வுகள் யாவும் இடம் பெற்றுக்கொண்டுருகின்றன. புதிய நாட்டை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குப் பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொள்கின்றார்.

