100 ரூபாய் மொய் கொடுத்த பாட்டி: ஆனந்த் அம்பானி செய்த செயல்! வைரலாகும் சம்பவம்.

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு வயதான பெண்மணியொருவர் 100 ரூபாயை திருமண பரிசாக கொடுத்துள்ளார்.

ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட விழா அண்மையில் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் உலக பணக்காரர்கள் திரை பிரபலங்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் பங்கேற்ற அனைவரும் தங்கள் தகுதிக்கு ஏற்ப பரிசுகளை வழங்கியிருந்தனர்.

இதேவேளை, முகேஷ் அம்பானி குஜராத்தில் உள்ள உள்ள அனைத்து பொது மக்களையும் இந்த விழாவிற்கு அழைத்திருந்தார்.

100 ரூபாய் மொய் கொடுத்த பாட்டி: ஆனந்த் அம்பானி செய்த செயல் | Ambani Son Wedding Anant Ambani Radhika Merchant

அந்த வகையில், இவ்விழாவிற்கு வந்திருந்த பாட்டி ஒருவர் மேடைக்கு வந்து ஆனந்த் அம்பானி, ராதிகா தம்பதிகளுக்கு பூங்கொத்து கொடுத்து, ஆனந்த் அம்பானிக்கு 100 ரூபாய் தாளை பரிசாக வழங்கி, தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார்.

அதனை எந்தப் பெருமையும் காட்டாமல் சிரித்துக்கொண்டே மரியாதையாக ஆனந்த் அம்பானி வாங்கியுள்ளார்.

கோடீஸ்வரராக இருந்தாலும், அந்த பாட்டி கொடுத்த பணத்தை பணிவுடன் வாங்கிக்கொண்ட ஆனந்த் அம்பானியை வாழ்த்திவருகின்றனர்.

100 ரூபாய் மொய் கொடுத்த பாட்டி: ஆனந்த் அம்பானி செய்த செயல் | Ambani Son Wedding Anant Ambani Radhika Merchant

இந்த காணொளியானது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

Previous Post Next Post