யாழில் குழந்தை பிரசவித்த பாடசாலை செல்லும் சிறுமி : வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம் !



 குழந்தையைப் பிரசவித்த பாடசாலைச் சிறுமியொருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் நேற்று (10) மாலை தனது தாயுடன் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுமி நேற்றிரவு குழந்தையைப் பிரசவித்த பின்னர் வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு இன்று (11) காலை தனது தாயுடன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post