மருதமுனை தாறுல் ஹனான் அரபுக் கல்லூரி புனித றமழான் மாதத்தில் நடாத்திய "அல்-குர்ஆனுக்கு மகுடம் சூட்டும் போட்டி நிகழ்ச்சிகளின் விருது வழங்கும் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு" அண்மையில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் உலமாக்கள் புத்தி ஜீவிகள் என ஏராளமானோரின் பங்கேற்ப்புடன் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வர்த்தகர் முஹம்மத் பிர்தௌஸ் அவர்களின் புதல்வி பாத்திமா பர்ஜீஸ் மற்றும் மொகம்மட் சுகைப் ஹப்ஸா ஆகிய இரு மாணவிகள் அல்குரான் முழுவதையும் மனனமிட்டு காபிளாவாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட்னர்.