கனடாவில் (Canada) புகலிட கோரிக்கை தொடர்பில் புதிய சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த சட்டம் தொடர்பில் கனேடிய அரசாங்கம் தெரிவிக்கையில், "புகலிட கோரிக்கை நிராகரிக்கப்படும் நபர்கள் துரித கதியில் நாடு கடத்தப்படக்கூடிய முறைமை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அண்மையில் வெளிநாட்டு மாணவர்களின் புகலிடக் கோரிக்கை 1500 வீதமாக உயர்வடைந்துள்ளது.இதே வேளை சுற்றுலா விசாவில் வந்து தங்கி இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமையினால் அவ்வாரணவர்களை உடன் தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பவும் கனேடிய அரசு உடன் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
