நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை: கல்வி அமைச்சு சற்றுமுன் அறிவிப்பு

 நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (3) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

பாடசாலைகளுக்கு நாளைய தினம் (03.06.2024) விடுமுறை வழங்குவது தொடர்பில் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும், மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை 3834 குடும்பங்களை சேர்ந்த 13717 பேர் பாதிக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   

weather sri lanka

அதேவேளை, பல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனை அண்டியுள்ள குடும்பங்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post