பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர்: சம்பியனான ஸ்வியாடெக்.

 

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சம்பியனானார்.

சனிக்கிழமை (08) நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜஸ்மின் பலினினியை எதிர்கொண்ட போலந்தின் ஸ்வியாடெக், 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வென்றே சம்பியனானார்.

தனது அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் நிலை வீராங்கனையான கொக்கோ கெளஃப்பை எதிர்கொண்ட ஸ்வியாடெக் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதுடன், ரஷ்யாவின் மிர்ரா அன்ட்றீவாவை 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு பலினினி தகுதி பெற்றிருந்தார்.


Post a Comment

Previous Post Next Post