நாளை ஜனாதிபதியாக பதவியேற்கும் அநுரகுமார: பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமனம்

 நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, நாளை காலை இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார்.

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் அவரது பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில் நாளை நடைபெறவுள்ளது.

அதனையடுத்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார. 

நாளை ஜனாதிபதியாக பதவியேற்கும் அநுரகுமார: பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமனம் | Anurakumara As President Tomorrow Morning இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத், நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். அதற்கு மேலதிகமாக புதிய ஜனாதிபதியின் கீழ் 15 அமைச்சுப் பொறுப்புகளும் கொண்டுவரப்படவுள்ளன.

சில அமைச்சுகளின் பொறுப்புகள் ஹரிணி மற்றும் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

அதனையடுத்து இரண்டொரு நாட்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அமைச்சுகளின் நிர்வாகம் அமைச்சு செயலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post