பொலிஸ் அதிகாரிகளின் உயிரிழப்பு குறித்து வெளியான உண்மை

 

Uploading: 628719 of 628719 bytes uploaded.

சிறி தலதா வழிபாடு' கடமைகளின்போது இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை மற்றும் கடுகன்னாவை பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிய இரண்டு அதிகாரிகள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் நேரடியாக 'சிறி தலதா வழிபாடு' கடமைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அல்ல என அவர்கள் குறிப்பிட்டனர்.

குறித்த இரு அதிகாரிகளும் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் எனவும் அவர்களில் ஒரு அதிகாரி மாரடைப்பாலும் மற்றொரு அதிகாரி வாகன விபத்திலும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தலதா மாளிகை வளாகத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் சிறி தலதா வழிபாடு கடமைகளுக்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post