Trending

முன்னாள் ஜனாதிபதி ரணில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி! | Transfer Of Ranil To Colombo National Hospital

இந்நிலையில் அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு சிறைச்சாலை வைத்தியர்கள் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் சிறைச்சாலை வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய அவருக்கு வீட்டு உணவை வழங்குவதற்கான அனுமதியை சிறைச்சாலை தலைமையகம் வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment