பலத்த காற்றினால் பதுளை மாவட்டத்தில் 114 வீடுகள் சேதம் ; ஒருவர் பலி!

நாட்டில் கடந்த சில நாட்களாக வீசிய கடும் காற்றினால் பதுளை மாவட்டத்தில் 114 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கிறது.

அதன்படி, பதுளை மாவட்டத்துக்கு உட்பட்ட 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஏற்பட்டசேதங்களின் விபரங்கள் பின்வருமாறு:

ஹப்புத்தளை பிரதேச செயலகப் பிரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்; 2 பேர் காயமடைந்துள்ளனர்.

பதுளை 3, ஹாலிஎல 3, எல்ல 1, பண்டாரவளை 22, ஹப்புத்தளை 20, அல்துமுல்ல 23, வெலிமடை 13, ஊவா பரணகம 18, சொரணதொட்ட 2, கந்தகெட்டிய 1, மீகஹகிவுல 3, ரிதிமாலியத்த 1, மஹியங்கனை 1, பசறை 1 மற்றும் லுணுகலை 2 ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது…


Post a Comment

Previous Post Next Post