கொழும்பு 7 விஜேராம மாவத்தை பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
விஜேராம மாவத்தைகுள் உள்நுழையும் வீதியில் உள்ள விகாரைக்கு அருகில் உள்ள பாரிய மரமொன்றே முறிந்து விழுந்துள்ளது.
குறித்த வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. மரத்தை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.