Trending

நியூசிலாந்திற்கு இலகுவாக Work Visa பெற்றுக்கொள்ள இலங்கை, இந்தியர்களுக்கு வாய்ப்பு!

  பருவாகல விசா

பல்வேறு நிபந்தனைகளுடன் குறுகிய கால அடிப்படையில் இந்த வீசா மூன்று வருடங்களுக்கு வழங்கப்படுகிறது. பட்ட படிப்பு , ஆங்கில புலமை எதுவும் தேவையில்லை.

நியூசிலாந்திற்கு இலகுவாக Work visa பெற்றுக்கொள்ள இலங்கை, இந்தியர்களுக்கு வாய்ப்பு | Easy Newzeland Work Visa For Srilankan Indians

குறிப்பிட்ட வேலைகள் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். ஏழு மாத காலப்பகுதியில் பருவகாலம் முடிவடைந்த பின்னர் நாடு திருப்ப வேண்டும் என்பது கட்டாயமாகும்.

விண்ணப்பிக்கும் தொழில்துறையில் ஆறு மாத முன் அனுபவம் தேவை. அதனை உறுதிப்படுத்தும் ஆவணம் அவசியமாகும். 

மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து பருவகாலத்தின் போது மீண்டும் நியூசிலாந்து செல்ல வாய்ப்பு வழங்கப்படும். பருவாகல விசா மூலம் நியூசிலாந்து செல்வோரு் அங்கு தொடர்ந்து வாழ முடியாது.

இலகுவாக விண்ணப்பிக்க வாய்ப்பு

குடும்பத்தை அழைத்து போக முடியாது என்பது நிபந்தனைகள் ஆகும். எனினும் நியூசிலாந்தில் அது தொடர்பான வேலையை தேடிப்பிடிப்பது விண்ணப்பிப்போரின் கடமையாகும்.

நியூசிலாந்திற்கு இலகுவாக Work visa பெற்றுக்கொள்ள இலங்கை, இந்தியர்களுக்கு வாய்ப்பு | Easy Newzeland Work Visa For Srilankan Indians

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் இதற்காக விண்ணப்பிக்க முடியும். 

இது நேரடியாகவே விண்ணப்பிக்க கூடியதொன்று என்பதால் முகவர்கள் ஊடாக பெருந்தொகை பணத்தை செலுத்தி ஏமாறுவதை தவிர்த்து, உறவினர்கள், நண்பர்கள் மூலம் நியூசிலாந்தில் வேலையினை தேடிக்கொள்வது சிறந்தாகும்

Post a Comment