Trending

அதிசயம் ஆனால் உண்மை!

  

பூக்களில் இருந்து எடுக்கும் அந்த இனிப்பு தண்ணியை அதாவது மலை தேனை (Nectar) தேனாக மாற்றுவதற்கு தேனீ என்ன பண்ணும் தெரியுமா? 

அந்த மலை தேன் துளியை தேன் கூட்டில் வைத்து அதன் இறக்கையை காத்தாடியாக மாற்றி உலரவைத்து தான் அதை தேனாக மாற்றும்.

நான்கு வாரம் முதல் நான்கு மாதம் தான் தேனீக்கள் வாழும், தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தால் 4-5 சொட்டு அளவு தான் தேன் சேகரிக்க முடியும்.


தேனீயிடம் பர்ர் என்று சத்தம் வர காரணம், ஒரு வினாடிக்கு 190 முறை அதன் ரக்கையை அடிப்பதால், அதாவது 11,400 முறை ஒரு நிமிடத்திற்கு. அதுவே கொசு போல் இருக்கும் மிட்ஜ் பூச்சி வினாடிக்கு ஆயிரம் முறை ரக்கையை அடிக்கும்.


ஒரு கிலோ தேனை திரட்ட, தேனிக்கள் 40 லட்சம் பூக்களில் இருந்து மலை தேனை சேகரிக்க வேண்டும்.


தேனீக்கள் பிறப்பில் இருந்தே தேன் சேகரிக்கும் வித்தையை அறிவதில்லை, மூத்தவர்கள் கற்று தருகிறார்கள்.

வேலையாட்கள் பெண்கள் ஆகவும், அவர்களின் பாதுகாவலர்கள் ஆண்களாகும் இருக்கிறார்கள்.


விகிதச்சார முறைப்படி பெண்கள் நூறு என்றால், பாதுகாவலர் ஒருவர் தான், அவரின் பிரதான வேலை ராணி தேனீக்கு குழந்தை பாக்கியம் கொடுப்பது மட்டுமே, that is the jobless job of a male.


ஒரு தேன்கூட்டில் இருந்து வருடத்திற்கு பத்து முதல் முப்பது கிலோ வரை தேன் கிடைக்கும்.

உலகத்தில் கிடைக்கும் பொருளில் தேனில் மட்டுமே உயிர் வாழ்வதற்கு தேவையான அதனை புரதமும் கிடைக்கிறது.


தேனீக்கள் வேகுல் நாட்டியம் (Waggle Dance) மூலம் பேசி கொள்ளும். பக்கத்தில் எங்கு உணவு இருக்கிறது என்பதையும் தெரிவிக்கும்.


ஒரு தேன்கூடு ஒரு ராணி தேனீயின் தலைமையின் கீழ் செயல்படும், அவளின் பாதுகாப்பிற்கு ஆயிரம் வேலை ஆட்கள் இருப்பார்கள், தன் வாழ் நாளில் பத்து லட்சம் முட்டைகள் ஈடும்.


தேனீக்கள் இல்லை என்றால், உலகில் காய், கனி, செடி, கொடி எதுவும் வளராது. தேனிக்கள் தான் மகரந்த சேர்க்கையை உண்டு பண்ணுகின்றன.


ஒரு வேலை ராணி - சோம்பேறியான, சொபலாங்கியான தேனிகளை பெற்று போட்டால், மற்ற தேனீக்கள் சேர்ந்து ராணியை கொன்றுவிடும்.


கொலை மற்றும் வேறு காரணத்தால் ராணி தேனீ இறந்து விட்டால், எல்லோரும் சேர்ந்து புதிதாக பிறக்க போகும் தேனியில் ஒரு ராணியை தேர்ந்து எடுத்து, அதற்கு அந்த இனத்தின் சிறந்த உணவான “ராயல் ஜெல்லி” கொடுக்கப்படும், அது எதற்கு என்றால், நல்ல ஆரோக்கியமான முட்டை இடுவதற்கு.


அதனால் தான் ராணி தேனீ மட்டும் ஐந்து வருடங்கள் வாழும், மற்றவை சில வாரம் மற்றும் சில மாதங்கள்.

சோகமான ஒரு விஷயம் என்னவென்றால், கடந்த சில காலங்களாக இந்த தேன் கூடு கலாச்சாரம் அழிந்து வருகிறது.


காரணம் இது வரை அறிய படவில்லை. 90% தேனீக்கள் மறுபடி அதன் கூட்டுக்கு வரவில்லை அல்லது வர தெரியவில்லை.


தேனீக்கள் என்று அழிகின்றதோ அன்றே மனித குலத்தின் அழிவு ஆரம்பம், தேனீக்கள் இல்லை என்றால் நாம் எல்லோரும் மாமிசம் மட்டும் தான் சாப்பிட வேண்டி இருக்கும், அதுவும் கொஞ்ச நாளைக்கு தான்.


நிச்சயம் உங்களிடம் நிறைய தகவல்கள் இருக்கும், அதையும் ஷேர் செய்ய மறக்காதீர்கள்.


ஆச்சர்யங்களை நோக்கிய பயணங்கள் தொடரும்.,

அன்புடன்

ஆரோ.செல்வா...🏍️

Aro Selvaa Ride

Post a Comment